Tuesday, September 18, 2012

அணு உலையை தகர்ப்போம்!!

உலகளாவிய கூடங்குளம் அணுஉலை போராட்டம் ஒரு தொகுப்பு!!







 

Saturday, August 18, 2012

ஆசாரக்கோவை

                  


மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:

  • ஆசார வித்து (பஃறொடை வெண்பா)
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து
  • ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் (இன்னிசை வெண்பா)
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்
  • தக்கிணை முதலியவை மேற்கொள்ளல் (இன்னிசை சிந்தியல் வெண்பா)
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்
  • முந்தையோர் கண்ட நெறி (இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை
  • எச்சிலுடன் தீண்டத் தகாதவை (இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்

  • எச்சிலுடன் காணக் கூடாதவை (இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து
  • எச்சில்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு
  • எச்சிலுடன் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்
  • காலையில் கடவுளை வணங்குக (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி
  • நீராட வேண்டிய சமயங்கள் (பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்
  • பழைமையோர் கண்ட முறைமை (இன்னிசை வெண்பா)
உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை
  • செய்யாமல் தவிர்க்க வேண்டியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து
  • செய்யத் தகாதவை (இன்னிசை வெண்பா)
நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை
  • நீராடும் முறை ( இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்
  • உடலைப்போல் போற்றத் தக்கவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்
  • யாவரும் கூறிய நெறி (சவலை வெண்பா)
அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி
  • நல்லறிவாளர் செயல் (இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
நல்லறி வாளர் துணிவு
  • உணவு உண்ணும் முறைமை (இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து
  • கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு
  • உண்ணும் விதம் (இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு
  • ஒழுக்கம் பிழையாதவர் செய்வது (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்
  • பிற திசையும் நல்ல (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டில் பாடு
  • உண்ணக்கூடாத முறைகள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று
  • பெரியோருடன் இருந்து உண்ணும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்
  • கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண்
  • உண்ணும் கலங்களைக் கையாளும் முறை (இன்னிசை வெண்பா)
முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்
  • உண்டபின் செய்ய வேண்டியவை (பஃறொடை வெண்பா)
இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி
  • நீர் குடிக்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார் உடம்பு மடுத்து
  • மாலையில் செய்யக் கூடியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண்டு அடங்கல் வழி
  • உறங்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி
  • இடையில் செல்லாமை முதலியன (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து
  • மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்
  • மலம் சிறுநீர் கழிக்கும் முறை (குறள் வெண்பா)
பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்
  • மலம், சிறுநீர் கழிக்கும் திசை (இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்
  • வாய் அலம்பாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்
  • ஒழுக்க மற்றவை (பஃறொடை வெண்பா)
சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்
  • நரகத்துக்குச் செலுத்துவன (நேரிசை வெண்பா)
பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்
  • எண்ணக்கூடாதவை (இன்னிசை வெண்பா)
பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும்
  • தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
           தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்
  1. சான்றோர் இயல்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர் உண்ணு மிடத்து
  • சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
நுண்ணிய நூலறிவி னார்
  • மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு
  • உடன் உறைதலுக்கு ஆகாத காலம் (இன்னிசை வெண்பா)
உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்
  • நாழி முதலியவற்றை வைக்கும் முறை (இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்
  • பந்தலில் வைக்கத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க பந்த ரகத்து
  • வீட்டைப் பேணும் முறைமை (பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது உறல்வேண்டு வார்
  • நூல் ஓதுவதற்கு ஆகாத காலம் (இன்னிசை வெண்பா)
அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்
  • அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்
  • நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்
  • கேள்வியுடையவர் செயல் (இன்னிசை வெண்பா)
பழியார் இழியார் பலருள் உறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்
  • தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று
  • தளராத உள்ளத்தவர் செயல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்
  • ஒழுக்கமுடையவர் செய்யாதவை (இன்னிசை வெண்பா)
தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்
  • விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு
  • அறிஞர் விரும்பாத இடங்கள் (பஃறொடை வெண்பா)
கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை
  • தவிர்வன சில (பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்
  • நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை (இன்னிசை வெண்பா)
பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர்
  • ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை (இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம்
  • சில தீய ஒழுக்கங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
படக்காயார் தம்மேற் குறித்து
  • சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடுஅங்கு
ஓராறு செல்லுமிடத்து
  • நூல்முறை உணர்ந்தவர் துணிவு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு
  • சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
சாரத்தால் சொல்லிய மூன்று
  • கற்றவர் கண்ட நெறி (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார் கண்ட நெறி
  • , வாழக்கடவர் எனப்படுவர் (இன்னிசை வெண்பா)
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்
  • தனித்திருக்கக் கூடாதவர் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்
  • மன்னருடன் பழகும் முறை (இன்னிசை வெண்பா)
கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்
  • குற்றம் ஆவன (இன்னிசை வெண்பா)
தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடுக்குற்ற மாகி விடும்
  • நல்ல நெறி (இன்னிசை வெண்பா)
பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
அளவளா வில்லா இடத்து
  • மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன (இன்னிசை வெண்பா)
முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
காக்கைவெள் என்னும் எனின்
  • மன்னன் முன் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியா ரகத்து
  • மன்னன் முன் சொல்லக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்துப் பல்காற் பயின்று
  • வணங்கக்கூடாத இடங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர்பெரியார் செல்லு மிடத்து
  • மன்னர் முன் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி
  • ஆசிரியரிடம் நடக்கும் முறைமை (இன்னிசை வெண்பா)
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்
  • சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து
  • சொல்லும் முறைமை (இன்னிசை வெண்பா)
விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக செவ்வி அறிந்து
  • நல்ல குலப்பெண்டிர் இயல்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி அல்லால் பிற
  • மன்னர் அவையில் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து
  • பெரியோரிடம் உள்ள முச்செயல்கள் (நேரிசை வெண்பா)
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள
  • சான்றோர் பெயர் முதலியவை கூறாமை (நேரிசை வெண்பா)
தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை
  • ஆன்றோர் செய்யாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரிவர் அல்லா தவர்
  • மனைவியின் உள்ளம் மாறுபடுதல் (இன்னிசை வெண்பா)
வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய் விடும்
  • கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை (இன்னிசை வெண்பா)
நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்துமென் பார்
  • பழகியவை என இகழத் தகாதவை (இன்னிசை வெண்பா)
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
இகழின் இழுக்கந் தரும்
  • செல்வம் கெடும் வழி (நேரிசை வெண்பா)
அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வம் கெடும்
  • பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
உண்டது கேளார் விடல்
  • கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாம் கட்டின் மிசை
  • பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்தும்என் பார்
  • கிடைக்காதவற்றை விரும்பாமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்
  • தலையில் சூடிய மோத்தல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார் விடல்
  • பழியாவன (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
மூத்த உளஆக லான்
  • அந்தணரின் சொல்லைக் கேட்க (நேரிசை வெண்பா)
தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப தில்லை
  • சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
நின்று உழியும் செல்லார் விடல்
  • ஐயம் இல்லாத அறிவினர் செய்கை (இன்னிசை வெண்பா)
கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
ஐயமில் காட்சி யவர்
  • பொன்னைப் போல் காக்கத் தக்கவை (இன்னிசை வெண்பா)
தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்
  • எறும்பு முதலியவை போல் செயல் செய்தல் (இன்னிசை வெண்பா)
நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்
  • , சான்றோர் முன் சொல்லும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே நோக்கி யுரை
  • புகக் கூடாத இடங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்
  • அறிவினர் செய்யாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல்
  • ஒழுக்கத்தினின்று விலகியவர் (பஃறொடை வெண்பா)
அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்







Wednesday, August 15, 2012

செம்மொழி தமிழின் தகுதி சான்றுகள்



செம்மொழி தமிழின் தகுதி சான்றுகள்


உலக மொழிகள்:-

                
                உலகத்தில் ஆராயிரதிற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சுமொழிகளே. எழுத்து மொழிகளாக உள்ளனவற்றுள் 
இலக்கிய வளம் நிறைந்தவை மிகச் சிலவே. எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியான தமிழ் ஒன்றே 
என்று வள்ளலாரே அருள்கிறார்!!


செம்மொழிகள்:-

     

               திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும். தமிழ்,கிரேக்கம்,இலத்தீன்,சமற்கிருதம்,சீனம்,அரபு,எபிரேயம்,ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் அகத்தியலிங்கம். இவற்றுள் கிரேக்கம்,இலத்தீன்,சமற்கிருதம் ஆகிய மொழிகள் இன்று பேச்சுவழக்கில் இல்லை.



செம்மொழி தமிழின் சிறப்பு:-


            உலகில் இன்று வழங்கும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே எண்ணற்ற இலக்கிய வளங்களைக் கொண்டதாக விளங்கியது தமிழ் மொழி.  தொல்காப்பியம்,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினென்கீழ்கனக்கு,
சிலப்பதிகம்,மணிமேகலை,முத்தொலயிரம் இறையனார்,அகப்பொருள்,
ஆகிய செவ்வியல் இலக்கியங்கள், தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு சான்றாகிறது.


தமிழின் தனிபெரும்தன்மை 



தொன்மை:-


                உலகின் மிகப்பழமையான நிலப்பரப்பு குமரிக்கண்டம். அந்நிலைப்பகுதி கடற்கோளால் 
மூழ்கிவிட்டது. அத்தொன்னிலதில்தான் தமிழ் தோன்றியதெனத் தண்டியலங்கார மேற்கோள் கூறுகிறது.

       ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
       ஏன்கொளிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
       மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
       தன்னே ரிலாத தமிழ்.
       

தமிழின் சிறப்புகள்:-

  • தமிழ் தாய்மொழியாக அல்லாதவர்களும் தமிழை எளிதில் கற்க முடியும். 
  • மனதில் தோன்றும் எண்ணங்களை தெரிவிக்கத்தற்க சொற்களை உடையது தமிழ்.
  • தமிழ் எந்த ஒரு மொழியின் துணையின்றித் தனித்தியங்கும் மொழி.
  •  தமிழ் எழுத்து,சொற்கள் அன்றி வாழ்வியலுக்கும் இலக்கணம் கூறுகிறது.இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.....        

               

   தமிழ் ஒரு தனித்தியங்கும் மொழி:-

" தமிழில் உள்ள ஆயிரக்கணக்கான பேச்சுவழக்குச் சொற்களும் நூல்வழக்குச் சொற்களும் காலவெள்ளத்தில் அழிந்து போயின.....
எஞ்சியுள்ள பழஞ்சொற்களை கொண்டும் தேவைகேற்ப புதுச் சொற்களை புனைந்தும் தமிழால் தனித்தியங்க முடியும்!! " என்று லண்டன் தமிழ் ஆர்வலர் கால்டுவெல் கூறுகிறார்.


நன்றி 
- தமிழ்த்தொண்டு 

             







Thursday, July 12, 2012

ஊரும் அதன் சிறப்பும்

                                                   ஊரும் அதன் சிறப்பும் 





திருநெல்வேலி - அல்வா 
திருவல்லிபுத்தூர் - பால்கோவா 
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
மாயவரம் - கருவாடு 
மானாமதுரை - மல்லிகைப்பூ
பழனி - பஞ்சமிர்தம் 
திருப்பதி - லட்டு 
பத்தமடை - பாய் 
நாகை - கோலாமீன்
மதுரை - மரிக்கொழுந்து 
பண்ருட்டி - பலாபழம் 
திண்டுக்கல் - பூட்டு 
மார்த்தாண்டம் - தென்
மணப்பறை - முறுக்கு 
ஊத்துக்குளி - வெண்ணை 
கொடைக்காணல் - பேரிக்காய்
திருப்பூர் - உள்சட்டை (பனியன்)
கும்பகோணம் - இலை
காஞ்சிபுரம் - பட்டு
வேதாரண்யம் - உப்பு 
சேலம் - மல்கோவா மாம்பழம் 
சிவகாசி - வெடி 
ஈரோடு - மஞ்சள் 
குடியாத்தம் - நுங்கு
நீலகிரி - தைலம் 

தமிழ்நாட்டில் உள்ள ஊர்களுக்கே இவ்வளவு சிறப்புகள் உள்ளதே.
அப்போ தமிழ்நாடுக்கு எவ்வளவு சிறப்பு?
வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்நாடு!!

Tuesday, May 1, 2012

செம்மொழி


                                                                 செம்மொழி


செம்மொழி' (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப்படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.
உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.


செம்மொழித் தகுதி:-

                                     
# செம்மொழி இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு பிறந்திருக்க வேண்டும்.# அம்மொழியிலிருந்து மற்ற மொழிகள் தொன்றிருக்கவேண்டும்.
செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.
  1. இலக்கியப் படைப்புகள்
  1. கலைப் படைப்புகள்

இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன.


இலக்கியப் படைப்புகள்:-


ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.


கலைப் படைப்புகள்:-


ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.




உலகச் செம்மொழிகள்


இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.
  • இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
    • கிரேக்க மொழி
    • சமஸ்கிருதம்
    • இலத்தீன்
    • பாரசீக மொழி
  • ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
    • அரபு மொழி
    • எபிரேயம்
  • திராவிட மொழிகள்:
    • தமிழ்
  • சினோ-திபெத்திய மொழிகள்:
    • சீன மொழி

கிரேக்கம்:-


கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கிரேக்க இலக்கியத்தில் ஹோமர் எனும் மகாகவியின் காப்பியங்களான இலியது, ஒடிசி ஆகியன கி.மு.700 ல் வரி வடிவத்தை அடைந்திருந்தாலும் அதற்கு முன்பாகச் செவி வழிச் செய்திகளாக பல நூற்றாண்டுகள் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் வரலாற்றுப் பதிவுகள், டுமாஸ் தனிசின் சொற்பொழிவுகள் , பிளேட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்களின்தத்துவ நூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.


இலத்தீன்:-


ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. மேலும் இம்மொழி அறிஞர்களான சிசிரோ, சேலஸ்ட், டேசிட்டஸ், செனகா போன்றவர்களின் சொற்பொழிவுகள் , தத்துவங்கள் இலத்தீன் மொழிக்கு வளம் சேர்க்கின்றன. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இத்தாலிய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழங்கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.


அரபு மொழி:-


அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் குர் ஆன் சிறந்த இலக்கியமாகி விட்டது. அரேபியப் பழமொழிகள்கவிதைகள் போன்றவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன.


சீனம்:-

சீன இலக்கியம் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். சீன இலக்கிய வரலாற்றில் கி.மு. 600 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் , லாவுட்ஸ் என்பவர்கள்தான். கன்ஃபூசியஸ் சீன மொழியில் கி.மு.3000 ஆண்டு முதல் கி.மு. 600 ஆம் ஆண்டு வரையுள்ள இலக்கியங்களை நான்கு தொகுதிகளாகத் தொகுத்தளித்திருக்கிறார். ஐந்தாவதாக அவருடைய படைப்பான தென்றலும் வாடையும் தந்திருக்கிறார். லாவுட்ஸ் “தாவ்” எனும் நெறியை வழங்கியிருக்கிறார். இவர்கள் வழங்கிய இலக்கியம் இன்னும் உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் கட்டிடக் கலைக்கு அங்குள்ள 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதுமானது.


ஹீப்ரூ:-



ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. இது விவிலியக் காலம் எனப்படுகிறது. மோசஸ் என்பவரால் யூதர்களின் நீதிநெறிகள் , சட்டங்கள் ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. இது மிஷனா காலம் எனப்படுகிறது. இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் எழுதிய விளக்கம் கெமாரா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது. மூன்றாவதாக கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.


பாரசீகம்:-


ஈரான் நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள், அறிவியல் முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.


சமஸ்கிருதம்:-


இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட சமஸ்கிருதம் கி.மு1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் இராமாயணம் , மகாபாரதம் போன்ற காப்பியங்கள் செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் 1784 -ல்ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை ஆங்கிலம் , ஜெர்மன் , பிரெஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித நூல்கள் என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். இலக்கியம் , தத்துவம் , அரசியல் போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு வேதம் , உபநிடதம் , இதிகாசங்கள் ,காப்பியங்கள் , நாடகங்கள் , தத்துவ நூல்கள், நீதி நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தைச் செம்மொழியாகக் கருதச் செய்தன.


தமிழ்:-

இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்தபண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம்இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ்சமஸ்கிருதம் மொழிகள் தேவையாக உள்ளது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களானஎட்டுத்தொகைபத்துப்பாட்டுபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் , மணிமேகலை , முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை உள்ளன.இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...


Monday, April 30, 2012

இயல்கள்

1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல்
80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்

Monday, April 2, 2012

காலகட்ட வசதியை முடக்க : Disable Time Line

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்ட வசதி பலருக்கு அசெளகரியமாக இருக்கிறது. அதனை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோருக்கு இந்தப்பதிவு உதவியாக இருக்கும்.
உலாவி (browser) வழியாக
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகள் 6 மற்றும் 7. பேசுபுக்கின் இந்த வசதியை அனுமதிப்பதில்லை எனவே இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் இந்த பதிப்புகளை கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்
கீழே உள்ள இணைப்பில் சென்று இந்த பதிப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும் 
சேர்ப்புகள்( Add-ons) வழியாக


முறை 1 - TimeLineRemove
இந்த இணைப்பில் செல்லவும்

பட்டியலிடப்பட்டிருக்கும் நான்கு உலாவிகளில் உங்கள் உலாவிக்கு உரியதை தேர்ந்தெடுக்கவும்.



பயன்பாடு தரவிறக்கம் செய்யப்படும்.
பிறகு அந்த கோப்பை நிறுவி கோப்பை நிறுவி. உங்களுடைய பேசுபுக்கு பக்கத்திற்கு சென்றால் காலகட்ட வசதி முடக்கப்பட்டிருக்கும்.
உங்கள் உலவியின் வலது மூலையில் கீழே உள்ள படம் இருக்கிறதா என்பதை
உறுதி செய்துகொள்ளவும்
உங்களுடைய காலகட்ட வசதி மீண்டும் வேண்டும் என நினைத்தால் 
Menu - Tools - Add-ons சென்று TimeLineRemove.com என்ற சேர்ப்பை நீக்கிவிடவும்


  முறை 2 - TimeLineRemove (For Mozilla)
இந்த இணைப்பில் செல்லவும்
Add to Firebox தேர்ந்தெடுத்து நிறுவவும்
Menu - Tools -  User Agent Switcher - Internet Explorer 6 / Internet Explorer7

உலாவியை மூடி பின் மீண்டும் திறக்கவும்.
இப்போது  உங்களுடைய பேசுபுக்கு பக்கத்திற்கு சென்றால் காலகட்ட வசதி முடக்கப்பட்டிருக்கும்.
 உங்களுடைய காலகட்ட வசதி மீண்டும் வேண்டும் என நினைத்தால் 
Menu - Tools - Add-ons சென்று UserAgentSwicher என்ற சேர்ப்பை நீக்கிவிடவும்.
 
 
 
 
 -- நன்றி
                  தமிழ் குடில்
 
 
 
 
 
 

Sunday, March 25, 2012

வாஞ்சிநாதன்



வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்.


வாழ்க்கைச் சுருக்கம்:-


 

 திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.


 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு:-

 

 

அந்நாளில் பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது. வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்.
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.
புதுவையில் வாஞ்சி புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்திப்பார். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது. இந்தியர்கள் நடத்திவந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். இதற்காகப் பாடுபட்டு வந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இக்காரணங்களினால் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல வாஞ்சி முடிவு செய்தார்.


ஆஷ் துரை கொலை:-

 

 

1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.
வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.



கௌரவிப்பு:-

 

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

 





தேசியம் காத்த செம்மல் - முத்துராமலிங்கத் தேவர்

Muthuramalinga thevar

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழக தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை சமயத்துரையினர் 'தேசியம் காத்த செம்மல்' எனப் புகழப்பட்டுள்ளர்கள்.

 

குழந்தை பருவமும் குடும்ப வாழ்க்கையும்:- 

 

தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த பிறந்தவர். உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்ட உக்கிரபாண்டி தேவரின் மீது பார்வதியம்மாள் அவர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தா. இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார். இவரது இளமை பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற இவரது குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். பிள்ளை அவர்கள் தான் தேவரின் பள்ளிபடிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்து கொடுத்தார். பின்னர் இவரது ஆரம்பப்பள்ளி படிப்பை கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் இவர் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்ப பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்க தேவரருக்கு சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

 குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்:-

 

தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார். ஆப்பநாடின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.

1936 மாவட்ட வாரிய தேர்தல்:-

 

குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.      

1937 மாநில தேர்தல்:-

 

1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது. 1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றிபெற்றார். பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான C.ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.


தொழிலாளர்களின் தோழனாக:-

 

1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போரத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு TVS தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.


திரிபுரி காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்:-

 

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் மீண்டு போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார். பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகபெரிய கூட்டத்தினை கூட்டினார்.

சிறையில்:-

 

வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை கரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்க்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் 18 மாத சிறைவாசத்தில் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை கரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார்.


 சிறை வாசத்திற்கு பின்:-

 

 மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). 1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று தேவர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் கூட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்ததாகவும் தகவல்கள் நிலவின ஆனாலும் இதற்க்கு ஆதாரமின்மையால் நிரூபிக்கபடாமல் போயின. பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.                                

1952 பொது தேர்தல்:-

 

1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு:-

 

1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற போர்வர்து ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் நாக்பூரில் நடந்தது. இதில் சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணை தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

 

1957 பொது தேர்தல்:-

 

1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உளைத்துகொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது. தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இம்முறையும் இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.


கொள்கைகள்:-

 

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்
வீரமற்ற விவேகம் கோழைத்தனம் - விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும். ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். அதேநேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சி தனது அழிவின் பதில் சென்றது. இந்த கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் இந்த கட்சியிலிருந்த பெரும்பான்மையான மறவர் ஓட்டு வங்கியானது தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் சென்றது. தேவர் இந்த தென்னக தேவரின மக்களின் அன்பிர்க்குரியவராகவும் வணங்குதலுக்குரியவராகவும் திகழ்கிறார். இன்றும் இந்த மக்களின் ஆதரவோடு ஆட்சியமைக்க பல கட்சிகள் இவர்களை ஆதரித்து வருகிறன. இன்றும்கூட சில கலவரங்களின் பொழுது இவரது நினைவு சின்னங்கள் இலக்காவது அனைவரும் அறிந்த ஒன்றே.


 நினைவுச்சின்னம்:- 

 

தமிழ்நாடு அரசு இப்பெருமகனாரைப் போற்றும் வகையில் சென்னை மாநகரில் இவருடைய உருவச் சிலையினை நிறுவியுள்ளது.அச்சிலை நிறுவப்பட்டுள்ள சாலைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.



சிறப்புக் குறிப்புகள்:-

      நடுவண் அரசு 1995இல்  முத்துராமலிங்கத் தேவருடைய அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

    தேவர் தம சொத்துக்களை 17  பாகங்களாய்ப் பிரித்து, அதில் ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு மீதம் 16  பாகங்களை 16  பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தது குறுப்பிடத்தக்கது.





 -நன்றி
  தமிழ்த்தொண்டு