Sunday, March 11, 2012

திருக்குறள் ஓவியம்

திருக்குறளின் 1330 குறள்களை வைத்து திருவள்ளுவரை ஓவியமாக வரைந்துள்ளார், நாமக்கல் மாவட்டம், எளச்சிப்பாளையம், வித்யாபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11&ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி நவீனா. ‘‘குறள்களைப் படிக்கும்போது எல்லாம் திருவள்ளுவரை குறள்களால் ஓவியமாக வரைந்தால் அருமையாக இருக்குமே என்று நினைப்பேன். அந்த எண்ணத்தின் செயல் வடிவம்தான் இது’’ என்கிறார் நவீனா. இந்த ஓவியம் வரைவதற்காக மூன்று வாரங்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து இருக்கிறார். 
 

1 comment:

  1. திருவள்ளுவரை குறலோவியமாக தீட்டிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!!

    ReplyDelete